வீட்டிலேயே ஃபேஷ்வாஷ் க்ரீம் செய்ய எளிய வழி!! ஒரே நாளில் முகம் சொலிக்க இதை மட்டும் பயன்படுத்துங்கள்!!
கெமிக்கல் கலந்த ஃபேஷ்வாஷ் க்ரீம் பயன்படுத்தி முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சரும வறட்சி, சுருக்கம், கொப்பளம் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும்.
இதனால் வீட்டு முறையில் ஃபேஷ்வாஷ் க்ரீம் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்தி வாருங்கள்.
1)குப்பைமேனி இலை
2)சோப் பேஸ்
3)ஆலிவ் ஆயில்
ஒரு கப் குப்பைமேனி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அந்த பாத்திரத்தின் மேல் ஒரு பாத்திரம் வைத்து சோப் பேஸ் சேர்த்து டபுள் பாய்லிங் முறைப்படி நன்கு அதை கொதிக்க விடவும்.
சோப் பேஸ் கரைந்து வந்த பின்னர் அதில் குப்பைமேனி சாறு சேர்த்து கைவிடமால் கலக்கி விடவும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் 4 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கி ப்ரிட்ஜில் வைத்து குளிர்விக்கவும்.
8 மணி நேரம் கழித்து குப்பைமேனி ஃபேஷ்வாஷ் கெட்டியாக கிடைக்கும். இதை வெளியில் எடுத்து ஒரு கரண்டியால் நன்கு கலந்து விடவும். பிறகு இதை ஒரு டப்பாவில் போட்டு சேமிக்கவும்.
பயன்படுத்தும் முறை:
நீங்கள் காலையில் எழுந்த உடன் இந்த குப்பைமேனி ஃபேஷ்வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவவும். அதேபோல் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் குப்பைமேனி ஃபேஷ்வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகம் பொலிவாகவும் மிருதுவாகும் இருக்கும்.