கணினி கிராஷ் ஆவது எதனால்?? எப்படி தடுப்பது? இதோ முழு விவரம்!!
இந்த நவீன காலகட்டத்தில் செல்போன் கணினி இல்லாத நபர்களே இருக்க முடியாது அந்த வகையில் நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் ஆனது அடிக்கடி கிராஷ் ஆவதும் உண்டு இதிலிருந்து கணினியை எப்படி பாதுகாக்கலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் கம்ப்யூட்டர் ஆனது கிராஷ் ஆகுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதலாவதாக ஹார்டுவேர் பிரச்சினையாக இருக்கலாம்.
அதாவது ஒரு கணினியில் பல இயக்கங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரே இயக்கத்தை இரு சாதனங்கள் செய்யும் பொழுது கம்ப்யூட்டர் ஆனது கிராஷ் ஆகி விடுகிறது. அவ்வாறு சாப்ட்வேர் பிரச்சனை என்றால் டிவைஸ் மேனேஜருக்குள் சென்று பார்க்கலாம். அவ்வாறு சென்று பார்க்கும் பொழுது எதனால் கிராஷ் ஆனது என்பதை மஞ்சள் நிற குறியுடன் காண்பிக்கும். இந்த டிவைஸ் மேனேஜரில் கம்ப்யூட்டர் என்று காணப்படும் அதனை கிளிக் செய்து பார்க்கும் பொழுது ஒரே மாதிரியான இரு எண்கள் காணப்பட்டால் அதனை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.
இரண்டாவதாக ராம்:
அதாவது ராம் மெமரியை சிறிது உயர்த்துவதற்காக மற்றொரு சிப் ஒன்றை பொறுத்துவோம். அவ்வாறு பொருத்தும் பொழுது முன்னிருந்த ராம்-க்கும் புதிதாக பொருத்திய சிப்பிற்கும் வேறுபாடு இருக்கும் பட்சத்தில் பெட்டல் எக்ஸ்பிரஷன் எரர் என காண்பிக்கும்.
இவ்வாறு காண்பிக்கும் பொழுது ராமுடைய வெயிட் ஸ்டேட் உயர்த்தி இதனை சரி செய்து கொள்ளலாம்.
மூன்றாவதாக ஹார்ட் டிஸ்க்:
கம்ப்யூட்டர் உபயோகம் செய்பவர்கள் அவ்வப்பொழுது ஹார்ட் டிஸ்கை கிளியராக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் தேவையற்ற பைல்கள் அதிகரிக்கும் பொழுது கம்ப்யூட்டரின் இயக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அப்படியே நின்று விடும். எனவே ஹார்ட் டிஸ்கை ட்ராபிக் செய்வதன் மூலம் கம்ப்யூட்டரை சீராக வைத்துக் கொள்ளலாம்.
நான்காவதாக வைரஸ்:
பெரும்பான்மையாக வைரஸ்கள் தான் கம்ப்யூட்டர்கள் கிராஷ் ஆகுவதற்கு முதன்மையான காரணம். இதற்கு முறையான ஆன்டிவைரஸ் ப்ரோக்ராம் ஒன்றை இன்ஸ்டால் செய்து அவ்வபோது அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
இதே போல சாப்ட்வேர், பிரிண்டர், அதிகப்படியான வெப்பம், கம்ப்யூட்டருக்கு வரும் மின்சாரம் போன்ற பல காரணங்களும் இதில் அடங்கும்.