5 நாளில் சியாட்டிகா பிரச்சனையிலிருந்து விடுபடலாம்!! இதோ இந்த எளிமையான வீட்டு வைத்தியம் போதும்!!
சியாட்டிகா என்பது முதுகு தண்டு வடத்தில் இருக்கும் ஒரு நரம்பு ஆகும்.அதாவது நமது முதுகு தண்டுவடம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கால் பாதம் முடியும் வரை இருக்கும் ஒரு நரம்பு மண்டலம்தான் சியாட்டிக்.உடலில் உள்ள மிக நீளமான நரம்பு இது ஒன்றுதான். இந்த நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நம்மால் எழுந்து கூட நிற்க இயலாது.உடலானது மிகவும் சோர்வாக காணப்படும்.
குறிப்பாக அதிகப்படியான பெண்களுக்கு தான் கால்சியம் குறைபாடு குறைவாக இருக்கக்கூடும்.அவ்வாறு 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் இந்த சியாட்டிகா பிரச்சனை காணப்படும்.இந்த பிரச்சனையை ஆரம்ப கட்ட காலத்தில் கண்டுபிடித்தால் மிக எளிமையாக சரி செய்து விடலாம்.காலின் பின் பகுதியில் வலி ஏற்பட்டு மரத்துப் போவது போல் காணப்பட்டால் சியாட்டிகா பிரச்சனை என்று நாம் உணரலாம்.
அது மட்டுமின்றி ஒரு சிலருக்கு இடுப்பின் கீழ் வலி காணப்படும் இது சாதாரண வாயு பிடிப்பு என்று தவறாக நினைத்து விடுகிறார்கள்.சியாட்டிகா நரம்பானது மேலிருந்து கீழ் வரை செல்வதால் ஒரு சிலருக்கு இது இழுப்பது போல் கூட வலி காணப்படும். இவ்வாறான வலிகள் ஏதேனும் உணர்ந்தால் சியாட்டிகா பிரச்சினையாக இருக்கலாம் என்று இனி தெரிந்து கொள்ளலாம்.
எப்சோம் உப்பு
இதில் அதிகளவு மெக்னீசியம் சல்பேட் உள்ளதால் இது நரம்பு மண்டலத்திற்கு அதிக அளவு சத்துக்களை கொடுக்கும்.
குளிக்கும் வெந்நீரில் இரண்டு கப் அளவு எப்சம் உப்பு சேர்த்து குளித்து வர சியாடிக் பிரச்சனையிலிருந்து சற்று விடுபடலாம்.
ஒத்தடம்:
வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுப்பதால் உள்ளிருக்கும் வீக்கமானது குணமாகும்.
இஞ்சி:
இஞ்சியை டீயாக கூட குடிக்கலாம்.ஏனென்றால் இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால் சியட்டிக் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த அருமருந்தாக இருக்கும்.
இதனையெல்லாம் தவிர்த்து பாட்டி வைத்தியம் முறையும் சியாட்டிக் பிரச்சனையில் இருந்து விடுபட கைகொடுக்கும்.
தேவையான பொருட்கள்:
கிராம்பு 4
கருப்பு ஏலக்காய் 2
பட்டை
வெல்லம்
செய்முறை:
ஒரு இடிக்கல்லில் எடுத்து வைத்துள்ள கிராம்பு கருப்பு ஏலக்காய் சிறிதளவு பட்டை இவை மூன்றையும் சேர்த்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் ஒன்றை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அது ஒரு கிளாஸ் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
நன்றாக கொதித்து வரும் பொழுது எடுத்து வைத்துள்ள வெள்ளத்தையும் சேர்க்க வேண்டும்.
பின்பு இந்த தண்ணீரை வடிகட்டி பருகலாம்.
இதனை இரவு தூங்குவதற்கு முன் குடிப்பது சியாட்டிகா பிரச்சனைக்கு மிகவும் நல்லது.