பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!  ரயில்கள் நிறுத்தப்பட்டதால் நாளை இந்த வழித்தடத்தில் 150 பஸ்கள் இயக்கம்!! 

0
334
important-notice-to-general-public-150-buses-will-operate-on-this-route-tomorrow-as-trains-have-stopped
important-notice-to-general-public-150-buses-will-operate-on-this-route-tomorrow-as-trains-have-stopped

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!  ரயில்கள் நிறுத்தப்பட்டதால் நாளை இந்த வழித்தடத்தில் 150 பஸ்கள் இயக்கம்!! 

மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அதற்கு ஈடு செய்யும் வகையாக 150 பஸ்களை கூடுதலாக இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

சென்னையில் தற்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து நாளையும் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கு ஈடு செய்யும் வகையில் பயணிகளின் நலன் கருதி கூடுதலாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி பயணிகளின் வசதிக்கென தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வழித்தடத்தில் நாளை 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதுப்பற்றி போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை 03.03.2024 அன்று தென்னக ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பயணிகள் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக காலை 10 மணி முதல் மதியம் 03:15 மணி வரை சென்னை கடற்கரை தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை பிராட்வேயில் இருந்து அண்ணா சாலை வழியாக தாம்பரம் செல்வதற்கு 60 பேருந்துகளும், பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரம் வரை 20 பேருந்துகளும் இயக்கப்படும். அதேபோல் கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பேருந்துகளும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை 30 பேருந்துகளும், பிராட்வேயில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பேருந்துகளும், தி. நகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பேருந்துகளும் கூடுதலாக நாளை இயக்கப்பட உள்ளது.

 

Previous article6 விமானம் வந்து போற இடத்துக்கு சர்வதேச அந்தஸ்தா?? தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு அம்பானி மகன் திருமணத்திற்கு மட்டும் மெகா மொய்!!
Next articleஅடுத்தடுத்து  தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நிலநடுக்கம்!! பீதியில் உறைந்த மக்கள்!!