10 நிமிடத்தில் மூட்டு வலி நிரந்தரமாக குணமாக வெங்காயத்தை இப்படி தடவுங்கள்!!
இந்த நவீன காலகட்டத்தில் 30 வயது தாண்டுவதற்கு முன்பாகவே மூட்டு மற்றும் முழங்கால் வலி வந்து விடுகிறது.நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கம் தான் தற்பொழுது சிறிய வயதிலேயே மூட்டு வலி வர காரணமாக அமைந்துள்ளது.
கால்சியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உண்பதையே விட்டு விட்டோம்.துரித உணவுகளை தான் அதிகம் சாப்பிட்டு வருகிறோம்.
இதனால் மாரடைப்பு என தொடங்கி கொலஸ்ட்ரால் வரை பல பிரச்சனைகள் உண்டாகிறது. குறிப்பாக நமது மூட்டுகளின் இடையில் ஜவ்வு போன்ற அமைப்பு இருக்கும் இதில் அந்த ஜவ்வில் இருக்கும் பசை இல்லாத விட்டால் இரண்டு எலும்புகளும் உரசி நமக்கு வலி ஏற்பட்டு விடும்.
இதிலிருந்து உடனடியாக எப்படி விடுபடுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்படி மூட்டு வலியில் இருந்து உடனடியாக விடுபடுவது:
தேவையான பொருள்கள்:
வெங்காயம்
தேங்காய் எண்ணெய்
மஞ்சள்
வெங்காயத்தில் அதிக அளவான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
வெங்காயத்தில் கால்சியத்துடன் ஆன்ட்டி இன்ஃப்ளவ்மென்ட்ரி அதிக அளவு உள்ளது.
இது நம் எலும்பு பலவீனமாக உள்ளதை சரி செய்ய உதவும்.
மஞ்சள் நமக்கு கிருமி நாசினியாக பயன்படுகிறது.
செய்முறை:
வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்பு இதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
இந்த கலவையானது நன்றாக எண்ணெய் சுண்டியதும் தயாராகிவிடும்.
இதனை கை கால்களில் வலி இருக்கும் இடங்களில் தடவலாம்.
குறிப்பாக இரவு நேரத்தில் தடவி விட்டு காலையில் அதனை சுத்தம் செய்யும் பொழுது வீக்கம் மற்றும் வலி என்பது முற்றிலும் இருக்காது.