சூட்டு கொப்பளம் வந்து விட்டதா? அப்போ இதை அங்கு தடவி மறைய வையுங்கள்!!
கோடை காலத்தில் வரக் கூடிய பாதிப்புகளில் ஒன்று சூட்டு கொப்பளம். உடலில் அதிகளவு சூடு உருவானால் சூட்டு கொப்பளம் ஏற்படும். இந்த சூட்டு கொப்பளத்தை மறைய வைக்க வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும்.
1)வேப்பிலை
2)மஞ்சள்
2 அல்லது 3 கொத்து வேப்பிலையை உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக்கவும். பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து கலந்து சூட்டு கொப்பளம் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.
1)தேங்காய் எண்ணெய்
2)கற்றாழை ஜெல்
ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து உடலில் உள்ள சூட்டு கொப்பளங்கள் மீது தடவி வந்தால் அவை ஓரிரு நாட்களில் குணமாகி விடும்.
1)வெள்ளரி சாறு
ஒரு துண்டு வெள்ளரிக் காயை அரைத்து சாறு எடுத்து சூட்டு கொப்பளங்கள் மீது பூசினால் அவை விரைவில் மறையும்.
1)ஐஸ் கட்டி
ஒரு துண்டு ஐஸ் கட்டியை சூட்டு கொப்பளம் மீது வைத்து ஒத்தடம் கொடுத்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.
1)வெந்தயம்
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு ஊற விடவும். பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி சூட்டு கொப்பளங்கள் மீது பூசினால் சில தினங்களில் தீர்வு கிடைத்து விடும்.