கோடை காலம், மக்களின் தேவையை அறிந்த முதல்வர் – தமிழகத்தின் 48 கோவில்களில் இலவச நீர்மோர் திட்டம்!!

0
226
#image_title

கோடை காலம், மக்களின் தேவையை அறிந்த முதல்வர் – தமிழகத்தின் 48 கோவில்களில் இலவச நீர்மோர் திட்டம்!!

கோடை வெயில் இந்தாண்டு முன்னதாகவே துவங்கி விட்டது என்றே கூறலாம். சித்திரை மாதம் துவங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 48 கோவில்களில் இலவச நீர் மோர் அளிக்கும் திட்டம் துவங்கவுள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு, ‘வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், முதற்கட்டமாக தமிழகத்தின் 48 கோவில்களில் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் துவங்கவுள்ளது. இத்திட்டம் சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலும் நாளை செயல்படவுள்ளது’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழக முதல்வர் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர். எனவே தான், கோடை காலம் துவங்கும் முன்னரே பக்தர்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்’ என்றும், ‘கோவில்களில் உள்ள கருங்கல் தரையில் வெயிலின் தாக்கம் காரணமாக கயிற்றால் செய்யப்பட்ட தரை விரிப்பு விரிக்கப்படவுள்ளது’ என்று கூறினார்.

மேலும், தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் படி, அனைத்து மண்டலங்களிலும் உள்ள திருக்கோவில்களில் உழவார பணிகள் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleபெங்களூரில் பரபரப்பு – நகைக்கடையில் நடந்த துப்பாக்கி சூடு!!
Next articleகன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து எதிர்ப்பு – காங்கிரஸ் அறிவிப்பு!!