மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்! – காரணம் இது தானாம்?

0
309
#image_title

மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்! – காரணம் இது தானாம்?

இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்.

நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே தான் நடத்தி வந்த தமிழ் தேசிய புலிகள் கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்று சமீபத்தில் மாற்றினார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆரணி தொகுதியை ஒதுக்கக் கோரி சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அவசரப் பொதுக்கூட்டம் நேற்று சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் ‘தன்னிச்சையாக செயல்பட்டதாலும், நிர்வாகிகள் இடையே எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளததாலும்’ மன்சூர் அலிகானை செயற்குழு அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளது, இனிமேல் அவர் கட்சியில் சாதாரண உறுப்பினர் மட்டுமே என தெரிவித்துள்ளது.

எனவே கூட்டணி குறித்து முடிவேடுக்கும் அதிகாரம் அக்கட்சியின் பொதுசெயலாளர் கண்ணதாசனுக்கு மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளனர்.

Previous articleஇன்றாவது வெளியாகுமா தேர்தல் தேதி? – செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல்ஆணையம்!
Next articleமம்தாவை யாரேனும் தள்ளிவிட்டார்களா? விசாரணை கோறும் பாஜகவினர்?