Home Business தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

0
தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!
#image_title

தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

சென்னை, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறுமுகத்துடன் இருந்து வருகிறது.மார்ச் 5 ஆம் தேதி ஒரு கிராம் ரூ.6,000 கடந்து விற்பனை ஆகத் தொடங்கியது.

அன்று முதல் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.நிபுணர்களின் கருத்துப்படி ரூ.6 ஆயிரத்தை கடந்த தங்கம் கூடிய விரைவில் ரூ.7,000 தொட்டு விடும் போல.

இப்படி தங்கம் விலை ஏறிக்கொண்டே சென்றால் ஒரு பொட்டு தங்கம் கூட வாங்க முடியாது போல என்று சாமானியர்கள் புலம்பி வருகின்றனர்.

நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,135க்கும் ஒரு சவரன் ரூ.49,080க்கும் விற்பனையானது.இந்நிலையில் இன்று அதன் அதிகரித்து இருக்கிறது.

அதன்படி,சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40 அதிகரித்து,ரூ.49,120க்கும்,ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.6,140க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.53,584க்கும் விற்பனையாகின்றது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.80க்கும்,ஒரு கிலோ ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.