17வது IPL சீசன்: CSK Vs RCB போட்டி!! வேட்டையை தொடங்கிய சென்னை சிங்கம்ஸ்!!
2024 ஆம் ஆண்டிற்கான முதல் IPL போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணியுடன் இதுவரை IPL கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB) அணி மோதியது.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.RCB அணியின் தொடக்க வீரர்களாக ஃபாஃப் டு பிளேசிஸ் மற்றும் கிங் கோலி களமிறங்கினர்.
தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய ஃபாஃப் டு பிளேசிஸ் சென்னை அணியின் முஸ்தபிசுர் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.அதன் பின்னர் விளையாடிய படிதார் மற்றும் மேக்ஸ்வெல் சென்னை அணியின் பந்து வீச்சை தாக்கி பிடிக்க முடியாமல் அவுட்டானார்கள்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 21 ரன்களின் ஆட்டமிழக்க அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது.174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSKவின் தொடக்க வீரர்களான ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திரா அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர்.
நான்காவது ஓவரில் ருத்ராஜ் ஆட்டமிழக்க அதன் பின்னர் ரஹானே களமிறங்கி அதிரடி காட்ட தொடங்கினார்.தொடக்கத்தில் இருந்தே RCBக்கு ஆட்டம் காட்டி வந்த ரவீந்திரா 7 ஆவது ஓவரில் 5 பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் ரஹானே 29 ரன்களுடனும்,டேரில் மிட்செல் 22 ரன்களுடம் ஆட்டம் இழந்தனர்.பிறகு சிவம் துபே மற்றும் ஜடேஜா கூட்டணி பொறுப்பாக ஆடி 18.4 ஓவரில் சென்னை அணியை வெற்றி பெறச் செய்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 ஓவரில் 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.இதன் மூலம் 17வது IPL சீசனில் தனது முதல் வெற்றியை சென்னை அணி பதிவு செய்து இருக்கிறது.