தேமல் மங்கு போன்ற சரும பிரச்சனைகள் நீங்க இந்த டீ போட்டு குடிங்கள்!!

Photo of author

By Divya

தேமல் மங்கு போன்ற சரும பிரச்சனைகள் நீங்க இந்த டீ போட்டு குடிங்கள்!!

Divya

Updated on:

Get rid of skin problems like Themal Mangu

தேமல் மங்கு போன்ற சரும பிரச்சனைகள் நீங்க இந்த டீ போட்டு குடிங்கள்!!

காற்றுமாசு,மோசமான உணவுமுறை பழக்கம்,இரசாயன அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றால் தோலில் தேமல்,மங்கு,வண்டு கடி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதை சரி செய்ய தினமும் நெல்லிக்காய் டீ குடித்து வரலாம்.நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)மலை நெல்லிக்காய்
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை:-

5 அல்லது 6 மலை நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் விதையை மட்டும்’எடுத்து விடவும்.

இந்த நெல்லிக்காய் துண்டுகளை வெயிலில் போட்டு நன்கு காய வைத்து வற்றல் போல் எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் இதை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய் வற்றலை போட்டு மிதமான தீயில் நீரை கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு நெல்லைக்காய் டீயை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு சுவைக்காக சிறிது தேன் கலந்து குடிக்கவும்.

இவ்வாறு தினமும் காலையில் பால் டீக்கு பதில் நெல்லிக்காய் டீ குடித்து வந்தால் தோல் தொடர்பான அனைத்து பாதிப்புகளும் நீங்கும்.