டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் அபராதம்! நீங்களும் மாட்டிகிட்டீங்க!
நேற்றைய(மார்ச்31) சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காத காரணத்தினால் டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய(மார்ச்31) போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 191 ரன்களை எடுத்தது. இதையடுத்து 192 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன் குவிக்க தடுமாறியது. சீரான இடைவெளியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்களின் முடிவில் 171 ரன்களை எடுத்து முதல் தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு பெட்டிகளில் தோல்வியை சந்தித்த டெல்லி அணி தற்பொழுது முதல் வெற்றியை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீச அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதாக தெரிகின்றது. இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியால் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீச முடியாததால் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அவர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மான் கில் அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காததால் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் நேற்றைய(மார்ச்31) போட்டியில் விபத்துக்கு பிறகு காயத்தில் இருந்து குணமாகி வந்த ரிஷப் பந்த் அவர்கள் சிறப்பாக விளையாடி தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.