அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்!

0
187
#image_title

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வரும் நிலையில் நீதி மன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த டெல்லி ரோஷ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நேரில் ஆஜராக வேண்டும் என்று பலமுறை சம்மன் அனுப்பியது. இருந்தும் நேரில் ஆஜாராக மறுத்ததால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை அமலாக்கத்துறை கடந்த 21ம் தேதி கைது செய்தது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் இந்த கைது விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் பலரும் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டதற்க்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை அமலாக்கத்துறையினர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி தரவேண்டும் என்று அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டது. அதன்படி டெல்லி சிறப்பு நீதிமன்றமும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணையில் இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட காவல் இன்றுடன்(ஏப்ரல்1) முடிவுக்கு வந்ததால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

அப்பொழுது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து டெல்லி திகார் சிறைச்சாலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஏப்ரல் 15ம் தேதி வரை அடைக்கப்படுகிறார்.

மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டதில் இருந்து இன்று(ஏப்ரல்1) வரை அமலாக்கத்துறையினர் விசாரணையில் இருந்து வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இன்று(ஏப்ரல்1) சிறையில் அடைக்கப்பட்டார்.