GOLD RATE: இறங்குமுகத்தை நோக்கி தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!
நம் நாட்டில் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக உள்ளது.தங்கத்தை ஆபரணமாகவோ,காசாகவோ வாங்கி சேமிக்கும் பழக்கத்தை மக்கள் அதிகளவு கொண்டிருக்கின்றனர்.கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பெருத்த லாபம் என்றாலும் ஒரு பொட்டு தங்கம் கூட வாங்க முடியாமல் தவித்து வரும் சாமானியர்களை நினைக்கும் பொழுது சற்று வருத்தமாகத் தான் இருக்கிறது.
ஒரு சவரன் தங்கம் ரூ.51 ஆயிரத்தை கடந்து விட்டதால் இனி தங்கம் வாங்கும் கனவை ஏழைகள் மறந்து விட வேண்டியது தான் போல.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று அதன் விலையில் சற்று சரிவு ஏற்பட்டு இருக்கிறது.
நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,455க்கும் ஒரு சவரன் ரூ.51,640க்கும் விற்பனையானது.இந்நிலையில் இன்று அதன் விலை மேலும் குறைந்து இருக்கிறது.
அதன்படி,சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து,ரூ.51,440க்கும்,ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.6,430க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.56,120க்கும் விற்பனையாகின்றது.
தங்கம் விலை குறைந்த போதும் வெள்ளி விலை குறையவில்லை.கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ82க்கும்,ஒரு கிலோ ரூ.82,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.