தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!!
1)வீட்டு பூஜை அறையில் வடக்கு திசை பார்த்து சாமி படங்கள் இருக்கக் கூடாது.
2)நீர் மற்றும் எண்ணெயில் தங்கள் நிழலை பார்க்கக் கூடாது.
3)அம்மி,ஆட்டுக்கல் கடவுளுக்கு சமம்.அதன் மீது கால் வைக்கவோ,உட்காரவோ கூடாது.அதேபோல் வீட்டு நிலை வாசல் மீது நிற்கக் கூடாது.
4)மாலை பொழுதில் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது.இரவு நேரத்தில் துணிகளை துவைக்க கூடாது.
5)இரவு நேரத்தில் எண்ணெய் வைத்து தலை சீவக் கூடாது.அதேபோல் முதலில் தலை சீவி விட்டு பின்னர் எண்ணெய் வைக்கக் கூடாது.
6)செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை அன்று நகம் வெட்டக் கூடாது,முடி வெட்டக் கூடாது.அதேபோல் வீட்டையும் சுத்தம் செய்யக் கூடாது.
7)கிழிந்த செருப்பை வீட்டிற்கு முன் வைத்திருக்கக் கூடாது.சனிக்கிழமை நாளில் கல் உப்பு வாங்கக் கூடாது.
8)பூஜை அறையில் விளக்கேற்றிய பின் வீட்டை துடைக்கக் கூடாது.
9)பெண்கள் மாத விளக்கின் போது பூஜை அறைக்கு செல்வதை தவிர்க்கவும்.பூஜை பொருட்களை எக்காரணத்தை கொண்டும் தொடக் கூடாது.
10)மாலை நேரத்தில் அரிசி புடைத்து சுத்தம் செய்யக் கூடாது.