விளக்கேற்றும் பெண்கள் தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்

0
347

நாகரிக வளர்ச்சியால் தற்போதைய பெண்கள் ஆன்மீக நாட்டம் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.ஆனால் தினமும் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதால் ஆன்மிக நன்மைகள் மட்டுமல்லாமல் நமது உடலிற்கும் பல நன்மைகளை தருகின்றன.

ஆனால் விளக்கேற்றும்போது சரியான முறையை பின்பற்ற வேண்டும். விளக்கேற்றும்போது செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும் இப்பதிவில் பார்க்கலாம்.

விளக்கேற்றும்போது செய்யக் கூடியவைகள்:

பெண்கள் மாலை நேரங்களில் அதாவது ஆறு மணியிலிருந்து 7 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும்.

பெரும்பாலும் விளக்கேற்ற நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும் அதுவே நமக்கு நன்மை பயக்கும்.

விளக்கேற்றும்போது குறைந்தபட்சம் ஒரு வகை பூவையாவது வைத்து ஏற்ற வேண்டும்.இரண்டு நறுமணங்களும ஒன்றாய் சேரும் போது மன அழுத்தம் குறையும்.

பௌவுர்ணமி நாட்களில் வாசலில் கோலமிட்டு விளக்கு வைத்துச் சந்திர பகவானை வழிபட்டால் பெரிதும் நன்மை பயக்கும்.

விளக்கை எப்பொழுதும் கிழக்கு திசை பார்த்து வைக்க வேண்டும்.

விளக்கேற்றும்போது கண்டிப்பாக செய்யக்கூடாதவை:

பெண்கள வீட்டில் இருக்க ஆண்கள் கட்டாயமாக விளக்கை ஏற்றக்கூடாது அது ஆன்மீக ரீதியாக நன்மை பயக்காது.

விளக்கை எப்போதும் ஊதியோ அல்லது கையாளோ அணைக்கக்கூடாது.துளசியில் அல்லது பூவில் அணைக்கலாம்.

பெண்கள் எப்பொழுதும் தலைவிரி கோலத்தில் விளக்கை ஏற்றக்கூடாது.

விளக்கின் திரியை தூண்டிவிட்டு கையிலிருக்கும் எண்ணெயை தலையில் தேய்க்க கூடாது.

விளக்கில் ஊற்றும் எண்ணெயை முழுவதுமாக எரிய வேண்டும் ஒருநாள் ஊற்றிய எண்ணெயில் மறுநாள் விளக்கேற்றக்கூடாது.

Previous articleபாயில் படுத்து உறங்குவதால் உடலில் நடக்கும் அதிசயம்!!
Next articleவாழ்க்கையில் விரைவில் வெற்றி அடைய இந்த 10 விஷயங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்