இந்த விளக்கில் தீபம் போட்டு வழிபட்டால் உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்!!
உங்கள் வீட்டில் தொடர்ந்து ஏதேனும் ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருந்தால் தங்களுக்கு குலதெய்வத்தின்
அருள் முழுமையாக கிடைக்கவில்லை என்று அர்த்தம்.உடல் சார்ந்த பிரச்சனை,மனம் சார்ந்த பிரச்சனை வாட்டி வந்தால் உங்கள் குலதெய்வத்தை நாள்தோறும் வழிபட்டு வாருங்கள்.
தங்கள் குலதெய்வத்தை விட்டுவிட்டு இஷ்ட தெய்வத்தை வணங்கி வருவது,குலதெய்வ வழிபாட்டை மறப்பது போன்றவற்றால் குலதெய்வ கோபத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும்.
குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யாவிட்டால் உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்காது.எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வாரம் ஒருமுறை செய்து வந்தால் குலதெய்வம் உங்கள் தேடி வருவார்.
வாரத்தில் எந்த கிழமை வேண்டுமாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.அதிகாலை நேரத்தில் எழுந்து வீட்டு வாசலை பெருக்கி மாட்டு சாணத்தை தெளித்து கோலம் போடவும்.
பின்னர் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையில் உள்ள குலதெய்வ படத்தை அலங்காரம் செய்யவும்.பிறகு ஒரு குத்து விளக்கு வைத்து நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி குலதெய்வத்தை மனமுருகி வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும்