கற்பூரத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!
பொதுவாக கற்பூரத்தை வீடுகள் மற்றும் கோவில்களில் கடவுளை வழிபடுவதற்காக மட்டுமே பயன்படுத்துவார்கள்.ஆனால் இந்த கற்பூரத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணம் உள்ளதாம்.அதுமட்டுமல்ல இந்த கற்பூரத்தின் வாசனையை சுவாசித்தால் போதுமாம் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க.கற்பூரத்தை எரிக்கும்போது அதில் இருந்து ஒரு நல்ல நறுமணம் வரும்.அதை நாம் நாள்தோறும் சுவாசித்து வந்தால்,மன அழுத்தம் குறையும், பதட்டம் குறையும் மற்றும் நம் மனதை அமைதியாக்கி முகத்தில் புன்னகையை வரவழைக்கும்.
இதுதவிர தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வருபவர்கள் பச்சை கற்பூர வாசனையை நுகர்ந்தால் போதும் உடனடியாக தீர்வு கிடைக்கும். மேலும், சளி மற்றும் இருமல் போன்ற தொந்தரவுகளுக்கும் கற்பூனை வாசனை நல்ல தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் விட கற்பூரத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதாம். எனவே வீட்டை சுத்தம் போது கற்பூர பொடியை தூவி விடுவதன் மூலம் வீட்டில் பாக்டீரியா போன்ற கிருமிகள் அண்டாமல் இருக்கும். துர்நாற்றம் இன்றி வீடும் நறுமணமாக இருக்கும்.
உடலில் அரிப்பு ஏற்படும் சமயத்தில் கற்பூரத்தை பொடியாக்கி அதை எண்ணெயில் கலந்து தடவி வந்தால் அரிப்பு நின்று விடுமாம். அதேபோல உடல் வலி, மூட்டு வலி மற்றும் தசை வலிகளுக்கும் இது சிறந்த நிவாரணியாக இருக்கும். இப்படி வழிபாட்டிற்கு பயன்படுத்தும் கற்பூரத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.