அதிரடியாக குறைந்த தங்கம் விலை..மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!
இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உச்சத்தில் தான் உள்ளது. மார்ச் மாதம் முதல் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கிய தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உச்சம் தொட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. அதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ரூ.80, புதன்கிழமை மீண்டும் அதிரடியாக ரூ.280 அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டது. இறுதியாக சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54,440க்கு விற்பனையானது.
அதேபோல கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,805க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருந்து உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இதனால், இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.54,240க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,780 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல 24 கேரட் ஆபரண தங்கம் கிராம் ரூ.7,396க்கும், சவரன் ரூ.59,168க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் மட்டுமின்றி வெள்ளியும் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.89க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000க்கும் விற்பனையாகி வருகிறது. இதேபோல் தொடர்ந்து விலை நிலை இருந்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.