மோடியின் செல்வாக்கை குறைத்ததே அண்ணாமலை தான் – செல்லூர் ராஜூ..!!
தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து பேசிய பாஜக மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினரன் வசமாகும். அதிமுக தொண்டர்கள் பலர் தினகரனுக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “அண்ணாமலை என்ன விசுவாமித்திரரா? அவர் சொன்னதும் அதிமுக அழிந்துபோக? அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அவர் இப்படி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அவருக்கு இப்போது தோல்வி பயம் வந்து விட்டது. அதை மறைக்கவே இப்படியெல்லாம் பேசி வருகிறார்.
பிரதமர் மோடியை ரோடு ஷோ என்ற பெயரில் அழைத்து வந்து அவரின் செல்வாக்கை குறைத்ததே அண்ணாமலை தான். எனவே அவர் பேச்சுக்கெல்லாம் மதிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு தெரியும் அண்ணாமலை எங்கே இருக்கிறார் என்று” என செல்லூர் ராஜூ அவரின் பாணியில் அண்ணாமலையை வச்சு செய்துள்ளார்.
கடந்த தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக இரு அணிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால் இந்த முறை கூட்டணியை தவிர்த்த நிலையில், இரு அணிகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி புகார் அளித்து வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சில சமயங்களில் எதிர்க்கட்சி தர்மத்தை மீறி இவர்களின் பிரச்சாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.