மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த ஸ்ருதிஹாசன்..என்னப்பா நடக்குது இங்க..??
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்க உள்ள தலைவர் 171 படத்திற்கான முதற்கட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பல ஆண்டுகளுக்கு பின்னர் நடிகை ஷோபனா ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் மற்றொரு நடிகையும் இணைந்துள்ளாராம்.
அவர் வேறு யாருமல்ல நடிகை ஸ்ருதிஹாசன் தான். சமீபத்தில் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் இனிமேல் என்ற ஆல்பம் பாடல் வெளியாகி விமர்சனங்களை பெற்றது. இந்த பாடலில் இவர்களின் கெமிஸ்ட்ரி வரவேற்பை பெற்றாலும், அதை தாண்டி நிறைய விமர்சனங்களை சந்தித்தது. அந்த அளவிற்கு இருவரும் நெருக்கமாக நடித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக இணைந்தி ஐபிஎல் மேட்ச் பார்ப்பது, பப்புக்கு சென்று பார்ட்டி செய்வது என்று ஊர் சுற்றி வந்தனர். இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், டேட் செய்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. போதாக்குறைக்கு ஸ்ருதிஹாசன் வேறு லோகேஷ் கனராஜை ஆண்களே காதலிப்பார்கள் பெண்கள் காதலிக்க மாட்டார்களா என்று ஏற்றி விட்டிருந்தார்.
இப்படி உள்ள சூழலில் லோகேஷ் அவரின் படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு வாய்ப்பு அளித்திருப்பது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ஒருவேளை இவர்கள் இருவரும் உண்மையாகவே காதலிக்கிறார்களோ என்று பலரும் சந்தேகித்து வருகிறார்கள். பலரும் என்ன லோகி இதெல்லாம் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இருப்பினும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் லோகேஷ் கனகராஜா இப்படி என்று ஷாக்காகி வருகிறார்கள்.