தமிழகத்தில் தாமரை மலருமா..??கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன..??
தமிழகத்தில் தற்போது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. ஏனெனில் தேர்தல் நாள் நெருங்கி விட்டதால், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், சில கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சாணக்யா செய்தி சேனல் தொடர்பாக உங்கள் ஓட்டு யாருக்கு என்று மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு திமுகவிற்கு 32% பேரும், அதிமுகவிற்கு 21% பேரும், பாஜகவிற்கு 22% பேரும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் பின் தங்கி இருந்த பாஜக தற்போது அதிமுகவை பின்னுக்கு தள்ளி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தமிழகத்தில் உள்ள மொத்த 39 இடங்களில் திமுக 36, அதிமுக 2, பாஜக 1, மற்றவை 0 இடங்களை பிடிக்கும் என்று கூறியுள்ளது. அதேசமயம் ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் 543 இடங்களில் பாஜக கூட்டணி 366 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
இதுதவிர இந்தியா கூட்டணி 104 இடங்களையும், மற்றவை 73 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் மீண்டும் பெரும்பான்மை பெற்று பாரதிய ஜனதா கட்சி 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேசமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொருத்தவரை பாஜக 1 இடத்தில் மட்டுமே வெல்லும். ஆனால் திமுக இந்தியா கூட்டணி மொத்தம் 39 இடங்களில் 36 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தமிழகத்தில் பாஜக அதிமுகவை வாக்கு வங்கியில் முந்தி இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.