பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் அதிமுக..?? உளறிய எடப்பாடியால் கசிந்த உண்மை..!!
கடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் அதிமுக படுதோல்வியை சந்தித்தது என்று கூறி பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டது. அதன்படி 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் மற்றும் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் என எதிலும் அவர்களுடன் கூட்டணி கிடையாது என்று மொத்தமாக கூட்டணியை முறித்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் பிரச்சாரத்தின்போது ஒரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகிறார்.
இருப்பினும் இப்போது வரை எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியையோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையோ ஒரு வார்த்தை கூட விமர்சனம் செய்யவில்லை. எந்த ஒரு இடத்திலும் இவர்களின் பெயரை கூறி விமர்சிக்கவில்லை என்பதால் இவர்கள் பாஜக உடன் மறைமுக கூட்டணியில் இருப்பதாக பலருக்கும் அதிமுக மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நடந்த பிரச்சாரத்தில் இந்தியா கூட்டணியால் ஒருபோதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. ஸ்டாலினின் கனவு நிறைவேறாது என்று பழனிச்சாமி கூறியிருந்தார். உடனே இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்காது என்றால் அப்போ பாஜக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி மறைமுகமாக கூறுகிறாரா? என திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், அதிமுக பாஜகவோடு கள்ளக்கூட்டணியில் இருப்பது உண்மை தான் என்று இப்போது தெரிந்து விட்டது. எடப்பாடியே அவர் வாயால் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பாஜக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பிரச்சாரம் செய்து வருகிறார் என திமுகவினர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.