Kerala Recipe: சுவையான கீரை தோரன் – கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

0
230
Eating "Nellikkai Laddu" will increase the number of red blood cells many times!!
Eating "Nellikkai Laddu" will increase the number of red blood cells many times!!

Kerala Recipe: சுவையான கீரை தோரன் – கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

பருப்பு கீரையில் கேரளா ஸ்டைலில் சுவையான தோரன் செய்வது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.இந்த ஆரோக்கியம் நிறைந்த கீரை தோரனை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பருப்பு கீரை – 1 கட்டு
2)தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
3)கடுகு – 1 தேக்கரண்டி
4)உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி
5)வர மிளகாய் – 3
6)தேங்காய் துருவல் – 1/4 கப்
7)சீரகம் – 1/4 தேக்கரண்டி
8)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு கட்டு பருப்பு கீரையை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் துருவிய தேங்காய்,சீரகம் மற்றும் வர மிளகாய் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் கடுகு,உளுந்து பருப்பு போட்டு பொரிய விடவும்.

பின்னர் நறுக்கிய கீரையை போட்டு வதக்கவும்.அதன் பிறகு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

பிறகு அரைத்த தேங்காய் கலவையை அதில் ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு வேக விட்டு இறக்கினால் சுவையான கீரை தோரன் தயார்.

Previous articleஆண்மையை அதிகரிக்கும் பாதாம் பிசின்!! இதை நெயில் வறுத்து சாப்பிட்டால் குதிரை பலம் கிடைக்கும்!!
Next articleஉங்க வீட்டில் உள்ள குக்கரை பார்த்தால் அமமுக சின்னம் நியாபகம் வர வேண்டும்!! டிடிவி தினகரன் மனைவி பிரச்சாரம்!!