டல்லடிக்கும் உங்கள் முகத்தை பொலிவாக்கும் பேஸ் பேக்!! இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும்!!

Photo of author

By Divya

டல்லடிக்கும் உங்கள் முகத்தை பொலிவாக்கும் பேஸ் பேக்!! இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும்!!

முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் டல்லடிக்க ஆரம்பித்து விடும்.எனவே பொலிவிழந்த முகத்தை பளபளப்பாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பப்பாளி
2)பால்
3)மஞ்சள்
4)தேன்

செய்முறை:-

முதலில் ஒரு கீற்று பப்பாளியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 டம்ளர் காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் மற்றும் 1/2 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ் பேக்கை முகம் முழுவதும் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.இவ்வாறு வாரத்திற்கு 3 முறை இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள டெட் செல்கள் நீங்கி முகம் பொலிவாக இருக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி
2)ரோஸ் வாட்டர்
3)மஞ்சள் தூள்

செய்முறை:-

ஒரு சிறிய தக்காளி பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை முகம் முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவினால் முகம் பொலிவாக காணத் தொடங்கும்.