இந்த கோயிலில் நவகிரக தீபம் ஏற்றினால் ஒரே மாதத்தில் திருமணம் நடைபெறுவது உறுதி!!
திருமணம் என்பது ஆண்,பெண் அனைவருக்கும் அவர்களது வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று.ஏழையோ,பணக்காரரோ யாராக இருந்தாலும் திருமணம் என்ற ஒன்று அவர்களது வாழ்க்கையில் நடைபெற வில்லை என்றால் அவர்களது வாழ்க்கை முழுமையடையது.
ஆனால் இன்று பெரும்பாலானோருக்கு திருமணத் தடை ஏற்பட்டு இருக்கிறது.ஒரு சிலருக்கு ஜாதக தோஷம் இருக்கும்.வயது பிரச்சனை போன்ற பல காரணங்களால் திருமணத் தடை ஏற்படுகிறது.
திருமணம் அந்தந்த வயதில் நடக்காமல் தள்ளி போவதை தான் திருமணத் தடை ஏற்பட்டிருக்கிறது என்று சொல்கிறோம்.இந்த திருமணத் தடை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செவ்வாய் அன்று செய்து வரவும்.
தொடர்ந்து 9 செவ்வாய் இந்த பரிகாரம் செய்து வந்தால் திருமணத் தடை நீங்கும்.இந்த பரிகாரத்தை உங்களுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலில் செய்ய வேண்டும்.
இதற்கு தேவைப்படும் பொருட்கள் ஒன்பது அகல் விளக்கு,நவதானியம்,நல்லெண்ணெய் மற்றும் பஞ்சு திரி.
முருகன் கோயிலில் கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் நவ கிரங்களுக்கு முன் மண் அகல் விளக்கு வைத்து மஞ்சள்,குங்குமத்தில் பொட்டு வைத்துக் கொள்ளவும்.பிறகு அந்தந்த நவகிரகங்களுக்கு உரிய நவ தானியத்தை அகல் விளக்கில் கொட்டி நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றவும்.பின்னர் திருமணத் தடை நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு 9 செவ்வாய் கிழமை நவதானிய தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமண யோகம் கூடி வரும்.