Kerala Recipe: பலாப்பழத்தில் டேஸ்டியான ஜாம்!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!!

Photo of author

By Divya

Kerala Recipe: பலாப்பழத்தில் டேஸ்டியான ஜாம்!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!!

உங்களில் பலருக்கு பலாப்பழம் பேவரைட்டாக இருக்கும்.பலா எப்படி அதிக வாசனை மற்றும் சுவையாக இருக்கிறதோ அதேபோல் தான் ஏகப்பட்ட ஊட்டசத்துக்களும் அடங்கி இருக்கிறது.

பலாவில் ஹல்வா,சிப்ஸ்,சில்லி,வறுவல் என்று பல வகை உணவுகள் செய்து உண்ணப்படுகிறது.
அந்த வகையில்பலா பழத்தில் சுவையான ஜாம் செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*பலா பழம் – 1 கப்
*வெல்லம் அல்லது வெள்ளை சர்க்கரை – 1 கப்
*நெய் – 1/4 கப்
*தேங்காய் பால் – 1/2 கப்

செய்முறை:-

முதலில் ஒரு கப் அளவு விதை நீக்கிய பலா பழத்தை எடுத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு 1/2 கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து 1/4 கப் நெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த பலாப்பழ விழுதை சேர்த்து கிளறவும்.

அதன் பின்னர் ஒரு கப் சூடான நீரில் வெல்லத்தை கொட்டி கரைந்து பலாப்பழ விழுதில் ஊற்றி கொதிக்க விடவும்.

பலாப்பழ விழுது கொதித்து சுண்டும் பொழுது அரைத்த தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் மீண்டும் கொதிக்க விடவும்.இவை நன்கு சுண்டி நெய்யில் இருந்து பிரிந்து வரும் தருணத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

பலாப் பழ ஜாம் ஆறியப் பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்து சேமித்து வைத்துக் கொள்ளவும்.பிரட்,சப்பாத்தி,பூரிக்கு இந்த பலாப்பழ ஜாம் சிறந்த காமினேஷனாக இருக்கும்.