முடி வெடிப்பு ஒல்லி பின்னல் பிரச்சனையா? கேரட்டுடன் இந்த மூன்று பொருட்கள் இப்படி பயன்படுத்தினால் வெட்ட வெட்ட முடி வளரும்!!

Photo of author

By Divya

முடி வெடிப்பு ஒல்லி பின்னல் பிரச்சனையா? கேரட்டுடன் இந்த மூன்று பொருட்கள் இப்படி பயன்படுத்தினால் வெட்ட வெட்ட முடி வளரும்!!

ஆண்,பெண் இருவருக்கும் பெரிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல்.ஹார்மோன் பிரச்சனை,ஊட்டச்சத்து குறைபாடு,மன அழுத்தம் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

சிலருக்கு முடி நீளமாக இருக்கும்.ஆனால் அடர்த்தி இருக்காது.இதை சரி செய்ய வீட்டு வைத்தியங்களை செய்தல் நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)கேரட்
2)தயிர்
3)வெந்தயம்
4)வாழைப்பழம்
5)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றிஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.மறுநாள் ஒரு முழு கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஊறவைத்த வெந்தயம்,கேரட் துண்டுகள்,3 தேக்கரண்டி தயிர்,அரை வாழைப்பழத்தின் துண்டுகள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

பிறகு அதில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இந்த விழுதை தலை முழுவதும் அப்ளை செய்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும்.அதன் பிறகு வழக்கம் போல் நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

இந்த ஹேர் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல்,முடி வெடிப்பு நீங்கி நன்கு அடர்த்தியாக வளரும்.