எம்.எஸ் தோனி வந்து பிரையன் லாராவை போன்றவர்! நிக்கோலஸ் பூரன் பேட்டி!
எம்.எஸ் தோனி அவர்கள் பிரையன் லாராவை போன்றவர் என்று மேற்கிந்திய வீரரும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் வீரருமான நிக்கோலஸ் பூரன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
நேற்றைய(ஏப்ரல்19) ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சொன்ன அணியின் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை சேர்க்க தவறினர்.
இதையடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இறுதியில் களமிறங்கிய அதிரடி காட்டிய எம்.எஸ் தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்களின் முடிவில் 176 ரன்கள் சேர்த்தார்.
177 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிக்காக் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அதிரடியாக விளையாட லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி எளிமையாக இலக்கை அடைய வழி வகுத்தது. இறுதியாக களமிறங்கிய நிக்கோலஸ் பூரனின் அதிரடியால் லக்னோஸ் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதையடுத்து போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் வீரர் நிக்கோலஸ் பூரன் அவர்கள் பேட்டியளித்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ் தோனி அவர்களை பற்றி புகழ்ந்து பேசினார்.
அப்பொழுது எம்.எஸ் தோனி அவர்கள் குறித்து நிக்கோலஸ் பூரன் அவர்கள் “இந்த சீசன் என்று இல்லாமல் அனைத்து சீசன்களிலும் எம்.எஸ் தோனி அவர்கள் களத்தில் இறங்கி விளையாடும் பொழுது களத்திற்கு உள்ளே மற்றும் களத்திற்கு வெளியே மஞ்சள் கடல் பெருகி இருப்பதை பார்க்க முடிகின்றது. இதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கின்றது. எம்.எஸ் தோனி அவர்கள் ஒரு நேஷ்னல் ஹீரோ ஆவார்.
பிரையன் லாரா அவர்கள் விளையாடிய காலத்தில் நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் பிரையன் லாரா அவர்களின் மிகப் பெரிய ரசிகர்கள். ஆனால் தற்போது பிரையன் லாரா அவர்களை போல ஒருவரை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
எம்.எஸ் தோனி போன்ற ஒருவருடன் களத்தில் இருந்து விளையாடுவது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது. எம்.எஸ் தோனி அவர்களுடன் களத்தை பகிர்ந்து கொண்ட இந்த தருணங்களை நாங்கள் எங்களுடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளிடம் சொல்லி மகிழ்வோம்” என்று பேட்டி அளித்துள்ளார்.