Kerala Recipe: கோடைக்கு குளிர்ச்சியான சம்பாரம் செய்து குடிங்க!! டெஸ்ட் சும்மா அள்ளும்!!
கோடை வெயிலில் இருந்து உடலை காத்துக் கொள்ள சம்பாரம் செய்து குடியுங்கள்.தயிரில் சின்ன வெங்காயம்,சீரகம் மற்றும் மேலும் சில பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் ரெசிபி தான் சம்பாரம்.இதை சுவையாக செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)தயிர் – 1 கப்
2)சின்ன வெங்காயம் – 5
3)இஞ்சி – 1 துண்டு
4)சீரகம் -1/4 தேக்கரண்டி
5)கொத்தமல்லி இலை – சிறிதளவு
6)உப்பு – தேவைக்கேற்ப
7)பெருங்காயம் – சிட்டிகை அளவு
8)கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:-
ஒரு கப் தயிருக்கு ஐந்து சின்ன வெங்காயம் எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கொத்து கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு உரல் எடுத்து அதில் சின்ன வெங்காயம்,இஞ்சி மற்றும் சீரகம் சேர்த்து இடித்துக் கொள்ளவும்.
பின்னர் தயிரில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியால் கலந்து விடவும்.பிறகு இடித்த வெங்காய கலவையை அதில் சேர்க்கவும்.
அதன் பின்னர் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள்,நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்தால் சுவையான சம்பாரம் தயார்.
அடிக்கின்ற வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக்க கேரளா சம்பாரம் செய்து குடிப்பது நல்லது.