மக்களே எச்சரிக்கை .. உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் இளநீர்!! இவர்களெல்லாம் கட்டாயம் சாப்பிடவே கூடாது!!
கோடைகாலம் தொடங்கி விட்டாலே உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று, அந்த வகையில் அதிகளவு தண்ணீர் குடிப்பது உடல் சூடு ஏறாமல் இருக்க இளநீர் நுங்கு போன்றவற்றை சாப்பிடுவது என்ற வழக்கத்தை நாம் வைத்திருப்போம்.ஆனால் இந்த இளநீர் குறிப்பிட்ட ஒரு சிலர் சாப்பிடவே கூடாது. மேற்கொண்டு சாப்பிட்டால் அவர்களுக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் சந்திக்க கூடும்.அந்தவகையில் யாரெல்லாம் இளநீர் சாப்பிடலாம் யாரெல்லாம் இளநீர் சாப்பிடக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பொதுவாகவே ஒரு சிலரின் உடலானது எப்பொழுதும் குளிர்ச்சியாகவும் ஒரு சிலரின் உடலானது வெப்பமாகவும் இருக்கும்.இவ்வாறு உடல் குளிர்ச்சியாக இருப்பவர்கள் மேற்கொண்டு இளநீரை சாப்பிடுவதால் சளி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு உள்ளாகுவர்.அதேபோல இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால் மிகவும் நல்லது என்று சொல்வதையும் நாம் பார்த்திருப்போம்.ஆனால் அவ்வாறு குடித்தால் இளநீரில் உள்ள பொட்டாசியம் மற்றும் குளுக்கோஸ் போன்றவை நமது வயிற்றுப் புண் ஏற்பட காரணமாக அமைந்து விடும்.
அதுமட்டுமின்றி இதில் உள்ள தாதுக்கள் அனைத்தும் சிறுநீரகத்தில் தங்கி அதிலிருந்து வெளியேற முடியாமலும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
உணவுகளை காட்டிலும் அமினோ அமிலங்கள் அதிக அளவு நிறைந்ததாக இளநீர் உள்ளது. குறிப்பாக பொட்டாசியம் இதில் அதிகமாக உள்ளதால் இருதய நோயாளிகள் இதனை தினந்தோறும் கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம்.
அதுவே சிறுநீர் ரீதியாக பிரச்சனை உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். எனவே சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இளநீர் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அதேபோல பலருக்கும் உணவு ஒவ்வாமை என்ற ஒன்று இருக்கும். அவ்வாறு இருப்பவர்களும் இளநீர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேற்கொண்டு சர்க்கரை நோயாளிகளும் இளநீரை அதிக அளவு எடுத்துக் கொள்ளக் கூடாது.
இளநீரில் கார்போஹைட்ரேட் அதிக அளவு உள்ளதால் இது சர்க்கரையை அதிகரிக்க கூடும். இதுவே நாளடைவில் அவர்கள் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.அதுமட்டுமின்றி இளநீரை வெட்டியதும் உடனே அருந்தி விட வேண்டும். இல்லையென்றால் அதில் அதிகளவு தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகி நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.