புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசுக்கு சென்ற முக்கிய கோரிக்கை!!
பொதுமக்கள் அனைவருக்கும் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எங்கு சென்றாலும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசானது கொண்டு வந்தது.அந்த வகையில் மக்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்பொழுது இதனின் தேவை அதிகரித்து இருப்பதால் எண்ணற்ற விண்ணப்பங்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரேஷன் கார்டு வேண்டி உணவு வழங்கல் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர்.ஆனால் கடந்த வருடம் ஜூலை மாதமே இதன் செயல்பாடானது நிறுத்தி வைக்கப்பட்டது.மேற்கொண்டு விண்ணப்பித்த இரண்டு லட்சம் பேரில் 80 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது வரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது குறித்து பொதுமக்கள் மனு அளித்தும் பலமுறை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.மேற்கொண்டு மக்கள் இதுகுறித்து உணவு வழங்கல் துறையிடம் கேட்டால் எங்களை அலைக்கழித்து விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு எப்பொழுது கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பது குறித்து தெளிவான விளக்கத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.