இன்னும் சில மணி நேரத்தில் இந்த இடங்களெல்லாம் குளிரப்போகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெய்ன் அப்டேட்!!
தமிழகத்தில் வீசி வரும் அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கடந்த கோடை காலத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் அதிகளவு வெயில் வாட்டி வருகிறது.வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை மக்கள் முடிந்தளவிற்கு தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் வட மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் கோடை மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.கடந்த ஒரு வார காலமாக தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் வீசும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக சில மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் வட மாவட்டங்களில் இன்று முதல் வருகின்ற 28 ஆம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமே இருக்கும் என்பதினால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.