செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35-வது முறையாக நீட்டிப்பு….!!!!

0
281
V. Senthil Balaji
V. Senthil Balaji

திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்ததோடு மட்டுமின்றி மின்வாரியத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆளும் கட்சியான திமுகவிற்கு பெரும் தலைவலியாக மாறியது.

எனவே இந்த வழக்கில் இருந்து எப்படியாவது வெளியே வரவேண்டுமென நினைத்த செந்தில் பாலாஜி இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 2 நாட்களுக்கு முன்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இந்த வழக்கை விசாரித்தபோது 25ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், இன்று அவர் காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கிட்டத்தட்ட 35வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை அவருக்கு ஜாமீனும் கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜி விரைவில் விடுதலையாக வேண்டுமென திமுக கவுன்சிலர் மற்றும் பிரதிநிதி ஆகியோர் நாகை வேளாங்கண்ணியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

Previous articleசேலத்தில் ஆஃப் பாயில் போட்ட நபர்களை அள்ளிச்சென்ற போலீசார்!!
Next articleதயாரான மினி டைடல் பார்க்! சென்னை ரேஞ்சுக்கு மாறப்போகும் சேலம்!!  ரெசியூமுடன் ரெடியா இருங்க