தயாரான மினி டைடல் பார்க்! சென்னை ரேஞ்சுக்கு மாறப்போகும் சேலம்!!  ரெசியூமுடன் ரெடியா இருங்க

0
160
tidel-park-salem
tidel-park-salem

தயாரான மினி டைடல் பார்க்! சென்னை ரேஞ்சுக்கு மாறப்போகும் சேலம்!!  ரெசியூமுடன் ரெடியா இருங்க

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் மென்பொருள் நிறுவனங்களின் பங்கு இன்றியமையாதது.நாட்டில் சென்னை,பெங்களூரு,மும்பை,டெல்லி, ஹைதரபாத் போன்ற முக்கிய நகரங்களில் தான் மென்பொருள் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.ஆனால் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் கிடைக்கின்ற வேலைகளை செய்யும் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம்.

கிராமப்புற மாணவர்கள் பட்டப்படிப்பு மேற்கொள்ள நகரங்களை தேடி வர வேண்டி இருக்கு.படித்து முடித்த பின்னர் வேலைக்காக சென்னை,பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதினால் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற அவர்களின் ஆசை கனவாகி விடுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இரண்டாம் கட்ட நகரங்களாக உள்ள சேலம்,மதுரை,திருச்சி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மென்பொருள் நிறுவனங்களை வரவேற்க நியோ டைடல் பார்க் அமைக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தலைநகர் சென்னையில் தான் மென்பொருள் நிறுவனங்கள் அதிகளவு செயல்பட்டு வருகிறது.அதன் பின்னர் கோயம்புத்தூரில் ஒருசில மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரங்களில் ஒன்றான சேலத்தில் ஐடி பூங்கா அமைக்கும் பணிக்கான டெண்டர் விடப்பட்டு தற்பொழுது அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஆனைகவுண்டன்பட்டி-கருப்பூர் பகுதிகளை உள்ளடக்கிய 55 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் சுமார் ரூ.22.5 கோடி செலவில் ஒரு தரைத்தளம் மற்றும் 3 அடுக்குகள் கொண்ட மினி டைடல் பார்க் கட்டுமான பணி 80% நிறைவடைந்து இருக்கிறது.கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் நியோ டைடல் பார்க்கால் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலை கிடைக்கும்.இதன் மூலம் சேலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.