கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே.. இனி இந்த சேவை முற்றிலும் இலவசம்..!!
நாட்டில் தற்பொழுது கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது.மத்திய அரசு வழங்கும் இலவச கேஸ் இணைப்பு திட்டத்தால் லட்சக்கணக்கான ஏழை,எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்தியன் ஆயில்,பாரத்,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வணீகம் மற்றும் வீட்டு சமையல் பயன்பாடு என இரு வகைகளாக பிரித்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது.
இது தவிர 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெலிவரி ஊழியர்களால் ரெகுலேட்டர்,கேஸ் அடுப்பிற்கு செல்லும் ரப்பர் குழாய் தன்மை,கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் தொடர்பான சோதனைகள் செய்யப்படுகிறது.
இதன் மூலம் கேஸ் சிலிண்டரால் ஏற்படக் கூடிய விபத்துக்களும்,உயிர் சேதங்களும் தடுக்கப்படுகிறது.கேஸ் எஜென்சி மூலம் வழங்கப்படும் இந்த சேவைக்கு ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் இதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
சிலிண்டர் விநியோகம் செய்யக் கூடிய ஏஜென்சி ஊழியர்களின் மொபைல் செயலியில் கேஸ் சிலிண்டர் தொடர்பான தகவல்களை பதிவு செய்த பின்னர் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணிற்கு OTP வரும்.பின்னர் கேஸ் சிலிண்டர் சோதனையை ஊழியர்கள் மேற்கொள்வார்கள்.இதற்காக கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது என்று எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.