இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா..?? மே 01 முதல் இதெல்லாம் மாறப்போகுது..!!
நம் நாட்டில் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுவது வழக்க ஒன்று.அந்தவகையில் வருகின்ற மே 01 அன்று பல மாற்றங்கள் வர இருக்கின்றது.வாடிக்கையாளர்களின் கேஸ் சிலிண்டர் சோதனை இனி கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருக்கிறது.ஆதார் அட்டையில் விவரங்கள் அப்டேட் செய்யவதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று UIDAI அறிவித்து இருக்கிறது.
மேலும் வங்கி சேமிப்பு கணக்கு மினிமம் பேலன்ஸ்,ஜிஎஸ்டி வரியில் மாற்றம் என மே 01 முதல் பல வித சாதக பாதக மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றது.
வங்கி சேமிப்பு கணக்கின் மினிமம் பேலன்ஸில் வரக் கூடிய மாற்றங்கள்:
நாட்டில் பொதுத்துறை மற்றும் பல தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.ஒவ்வொரு வங்கியும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைக்கான கட்டணங்களை அவவ்போது உயர்த்தி வருகிறது.அந்த வகையில் எஸ் பேங்க் ஆனது பல வகை சேமிப்புக் கணக்குகளின் குறைந்தபட்ச இருப்பு தொகையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
ப்ரோ மெக்ஸ் சேமிப்பு அக்கவுண்ட்டுக்கான மினிமம் பேலன்ஸ் ரூ.50,000 மற்றும் இதை பராமரிக்க தவறினால் இதற்கான கட்டணத்தொகை ரூ.1,000 என்று நிர்ணயித்துள்ளது.சேமிப்பு அக்கவுண்ட் ப்ரோ பிளஸ்,யெஸ் எசென்ஸ் எஸ்ஏ,யெஸ் ரெஸ்பெக்ட் எஸ்ஏ ஆகியவைக்கான மினிமம் பேலன்ஸ் ரூ.25,000 மற்றும் இதற்கான கட்டணத்தொகை ரூ.750 என்று நிர்ணயித்துள்ளது.அதேபோல் புரோ சேமிப்பு அக்கவுண்ட்டுக்கான மினிமம் பேலன்ஸ் ரூ.10,000 மற்றும் இதற்கான கட்டணத்தொகை ரூ.750 என்று நிர்ணயித்துள்ளது.
மேலும் எஸ் சேவிங்ஸ் வேல்யூக்கான மினிமம் பேலன்ஸ் ரூ.50,00 மற்றும் இதற்கான கட்டணத்தொகை ரூ.500 என்று நிர்ணயித்துள்ளது.இவை கிஷான் சேமிப்பு கணக்கிற்கும் பொருந்தும்.எஸ் பேங்கிங் இந்த மினிமம் பேலன்ஸ் மாற்றம் வருகின்ற மே 01 தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.