சாமர்த்தியமாக செயல்பட்டு 50 பேர் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. ரியல் லைஃப் ஹீரோவிற்கு குவியும் பாராட்டுக்கள்..!! 

0
359
The boy who saved 50 lives by acting skillfully.. All praises for the real life hero..!!
The boy who saved 50 lives by acting skillfully.. All praises for the real life hero..!!

சாமர்த்தியமாக செயல்பட்டு 50 பேர் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. ரியல் லைஃப் ஹீரோவிற்கு குவியும் பாராட்டுக்கள்..!!

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் நந்திகமவில் ஆல்வின் பர்மா என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கட்டடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ கட்டடம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. கட்டடம் உள்ளே கிட்டத்தட்ட 50 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

இதனை கவனித்த 17 வயது சிறுவன் சாய் சரண் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக கட்டடம் மீது ஏறி ஜன்னல் வழியாக உள்ளே சிக்கி இருந்த தொழிலாளர்களுக்கு கயிற்றை கொடுத்து அவர்கள் வெளியே வர உதவி செய்துள்ளார். இதனால் தொழிலாளர்கள் அனைவரும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிறுவன் சாய் சரண் துணிச்சலாக செயல்பட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் சரியான சமயத்தில் உதவியதற்காக சிறுவன் சாய் சரணை பாராட்டியுள்ளனர். அப்பகுதி மக்களும் சாய் சரணை ரியல் லைஃப் ஹீரோ என்று கூறி வருகிறார்கள்.

தொடர்ந்து விபத்து குறித்து பேசிய தீயணைப்புத்துறை அதிகாரிகள், “எங்களுக்கு தகவல் வந்த உடன் சம்பவ இடத்திற்கு உடனடியாக 5 தீயணைப்பு வாகனத்தை அனுப்பி வைத்தோம். மருந்துகளுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் ஸ்டோர் இருக்கும் குடோனில் இருந்து தான் தீ பரவியுள்ளது. வெல்டிங் பணிகளின்போது ஏற்பட்ட தீப்பொறி கூட இந்த தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம்” என கூறியுள்ளனர்.

Previous articleவெளியான தேர்வு முடிவுகள்.. 30 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை..!!
Next article60 வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம்!! வரலாற்று சாதனை படைத்த பெண்!!