கோடைக்காலத்தில் 100% உடல் சூட்டை அதிகரிக்கும் கீரை மற்றும் பழங்கள்!! மக்களே இதையெல்லாம் அறவே தவிருங்கள்!!
கோடைகாலத்தில் நாம் உண்ணும் உணவில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். உடல் சூட்டை அதிகரிக்கும் மாமிசம் போன்றவற்றை சாப்பிடுவதுடன் பச்சை காய்கறிகள் பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.அந்த வகையில் பச்சை காய்கறிகளிலும் கீரைகளிலும் கூட உடல் சூட்டை அதிகரிக்கும் சில காரணிகள் உள்ளது.அவ்வாறான உணவுகள் எவை எந்த உணவுகள் கோடைகாலத்தில் சாப்பிடுவதற்கு உகந்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள்:
முதலாவதாக நாம் ஹைபிரேட் அதிகம் உள்ள முலாம் பழத்தை சாப்பிடுவதுடன் நாட்டு முலாம்பழம் சாப்பிடுவது நல்லது.குறிப்பாக நாட்டு முலாம்பழம் மற்றும் தர்பூசணியில் அதிக அளவு ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது.அதுமட்டுமின்றி 91 சதவீதத்திற்கும் மேல் இதில் நீர் சத்து உள்ளதால் நமது உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாகவே வைத்திருக்கும்.
கோடைகாலத்தில் அதிகப்படியானோருக்கு செரிமான கோளாறு இருக்கும் அவ்வாறு இருப்பவர்கள் தினந்தோறும் வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்ளலாம்.அதேபோல தயிருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மோராக எடுத்துக் கொள்வதும் நல்லது. உடலில் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள புதினா சாறு அல்லது புதினா சட்னி போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
கோடைகாலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்:
நமது ஊர் பக்கங்களில் கிடைக்கும், புளிச்சக்கீரை என்று கூறுவார்கள் இதில் அதிகளவு உடல் சூட்டை அதிகரிக்கும் காரணி உள்ளதால் இதனை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.அதேபோல எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளக் கூடாது.பழங்களில் குறிப்பாக மாம்பழம் அளவாகவே சாப்பிட வேண்டும் அளவுக்கு மீறி சாப்பிடும் பொழுது உடல் சூட்டை அதிகரித்து வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளை ஏற்படுத்தும்.
மேற்கொண்டு நாம் சமைக்கும் பொழுது உணவுகளில் சற்று காரத்தை குறைத்து சேர்க்க வேண்டும்.அதேபோல சப்பாத்தி பூரி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.