கோடைகாலத்தில் அந்தரங்க பகுதியில் வரும் சூட்டு கொப்பளத்தை 1 வாரத்தில் சரி செய்யலாம்!! இதோ ஈஸி ரெமெடி!!
வெப்பசலனமானது கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் நமது உடல் சூடு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அதற்கேற்றார் போல் உணவு வகைகளை எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்று.இந்த கோடை காலத்தில் அதிகளவு மாமிசம் உண்பதால் உடல் சூடு அதிகரிக்க கூடும்
இதனால் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுவதுடன் நமது அந்தரங்க பகுதிகளில் சூட்டு கொப்பளங்கள், கட்டிகள் போன்றவை உண்டாகிவிடும்.அவ்வாறு உண்டாகும் சூட்டு கொப்பளங்கள் மற்றும் கட்டிகளை வீட்டிலிருந்தே சரி செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சூட்டு கொப்பளங்களை சரி செய்யும் வீட்டு வைத்தியம்:
அருகம்புல் சாறு:
தொடர்ந்து இரண்டு வாரம் காலை நேரத்தில் 20 மில்லி என்று அளவில் அருகம்புல் சாறை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு இரண்டு வாரம் சாப்பிட்டு வர சூட்டு கொப்பளம் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
அருகம்புல் சாரானது நமது ரத்தத்தை சுத்திகரிப்பதால் கெட்ட பாக்டீரியாக்கள் அனைத்தும் அழிக்கக்கூடும்.
வேப்பெண்ணை விளக்கெண்ணெய் மஞ்சள் இவை மூன்றையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை சூட்டு கட்டி மற்றும் கொப்பளங்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.
இதனை ஒரு நாளில் மூன்று முறை கொப்பளம் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
இவ்வாறு வைத்து வர நாளடைவில் கொப்பளங்கள் அப்படியே மறைந்துவிடும் அதன் மேல் உள்ள தழும்புகளும் நீங்கும்.வேப்பெண்ணை விளக்கெண்ணெய் இவை அனைத்தும் உடல் சூட்டை குறைப்பதுடன் மஞ்சளானது கெட்ட பாக்டீரியாக்களின் தாக்கத்தை அழிக்கும்.
இந்த இரண்டையும் தொடர்ந்து செய்துவர கோடைகாலத்தில் அந்தரங்க பகுதியில் ஏற்படும் சூட்டுக் கொப்பளங்களை விரைவிலேயே சரி செய்துவிடலாம்.