தண்ணீர் போல் மலம் வெளியேறுகிறதா? இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் உடனடி தீர்வு நிச்சயம்!

Photo of author

By Divya

தண்ணீர் போல் மலம் வெளியேறுகிறதா? இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் உடனடி தீர்வு நிச்சயம்!

உண்ணும் உணவு செரிக்கப்பட்டு தேவையற்ற கழிவுகள் ஆசனவாய் வழியாக வெளியேறி வருகிறது.ஆனால் சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் உரிய நேரத்தில் மலக் கழிவுகள் வெளியேறாமல் அவை உடலில் தேங்கி பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.இவை குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் சிலருக்கு மலம் தண்ணீர் போல் வெளியேறும்.எவை முதுமை காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருக்கிறது.அதேபோல் பிறந்த குழந்தைகளுக்கும்,வயிற்று ஒற்றுக்கொள்ளாத உணவுகளை உண்பவர்களுக்கும் இந்த தண்ணீர் மலம் பிரச்சனை இருக்கும்.

ஒரு சிலருக்கு இந்த தண்ணீர் போன்ற மலம் இடைவிடாமல் வெளியேறி உடல் சோர்வை உண்டாக்கும்.இந்த பிரச்சனையை சரி செய்ய சூரணம் ஒன்று தயார் செய்து அருந்த வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)மாதுளை தோல் – 1 கப்
2)மாபருப்பு – 1
3)நெல்லிக்காய் விதை – 5

செய்முறை:-

ஒரு கப் மாதுளை தோல்,மாங்காய் விதையில் உள்ள பருப்பு,பெரு நெல்லிக்காயில் உள்ள விதை ஆகியவற்றை மேலே குறிப்பிட்டுள்ள அளவில் எடுத்து வெயிலில் நன்கு காய வைக்கவும்.

தொட்டால் மொரு மொரு பதத்தில் இருக்க வேண்டும்.இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும்.ஒரு வாரத்திற்கு இந்த பொடி பயன்படுத்த முடியும்.

சூரணம் செய்யும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.2 நிமிடங்களுக்கு பின்னர் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு மேலும் 2 நிமிடங்களுக்கு காய்ச்சவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றி அருந்தினால் தண்ணீர் மலப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.காலையில் வெறும் வயிற்றில் தான் இந்த சூரணத்தை அருந்த வேண்டும்.இவ்வாறு ஒரு வாரம் செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.