என்னது மாடு மேய்க்கணுமா..?? அந்த ஒரு காரணத்திற்காக சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட உதயநிதி..!!
தமிழக விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவில் படங்களை தயாரித்து வந்தார். இப்போதும் தயாரித்து வருகிறார். அப்படி படங்களை தயாரித்து வந்த சமயத்தில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் உதயநிதி ஹீரோவாக அறிமுகமானார்.
முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவான அந்த படம் நல்ல ஹிட்டாகவே தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில், மனிதன், நெஞ்சுக்கு நீதி, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு உடன் இணைந்து மாமன்னன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகிய உதயநிதி தற்போது முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் தவறவிட்ட சூப்பர் ஹிட் படம் குறித்து உதயநிதி கூறியுள்ளார். அதன்படி, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வம்சம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது உதயநிதி தானாம்.
இந்த படத்தின் கதையை கேட்டு உதயநிதிக்கு மிகவும் பிடித்து விட்டதாம். ஆனால் படத்தில் மாடு மேய்க்க வேண்டுமென இயக்குனர் கூறியதால், அதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று கூறி மறுத்து விட்டாராம். பின் என் தம்பி ஒருத்தன் இருக்கான் அவனும் படத்துல நடிக்க தயாரா இருக்கான் என்று கூறி அருள்நிதியை பரிந்துரை செய்து வைத்துள்ளார்.