மாமியாரை காதலித்த மருமகன்.. இருவருக்கும் ஊரறிய திருமணம் செய்து வைத்த மாமனார்..!!
நாட்டின் பல இடங்களில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என நினைக்கும் அளவிற்கு அவ்வபோது சில சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது பீகாரில் நடந்துள்ளது. அதன்படி, பீகார் மாநிலம் பாங்கா நகரை சேர்ந்த சிக்கந்தர் யாதவ் என்பவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
அதன் காரணமாக சிக்கந்தர் அவரின் மாமனார் திலேஷ்வர் தார்வே மற்றும் மாமியார் கீதா தேவி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், சிக்கந்தருக்கும் அவரின் மாமியாருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் நெருக்கத்தை பார்த்த சிக்கந்தரின் மாமனர் இருவரையும் சந்தேகித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இதுகுறித்து இருவரிடமும் துருவி துருவி கேட்டுள்ளார். ஆனால் இருவருமே அதை மறுத்துள்ளனர். அதன் பின்னர் இருவரையும் ஒருமுறை கையும் களவுமாக பிடித்துள்ளார். பின் உடனே ஊரை கூட்டி பஞ்சாயத்தையும் ஏற்பாடு செய்து விட்டார். பஞ்சாயத்தின்போது தலைவரிடம் தான் மாமியார் மீது காதலில் விழுந்து விட்டதாக சிக்கந்தர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
பின் இருவரின் சம்மதத்துடன் அவர்களுக்கு கிராமத்தினர் இணைந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமணத்தை சிக்கந்தரின் மாமனாரும், கீதா தேவியின் கணவருமான திலேஷ்வர் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார். கிராமத்தில் மட்டுமின்றி இவர்களின் திருமணம் சட்டப்படி நீதிமன்றத்திலும் நடைபெற்றுள்ளது. தன் மனைவியை காதலித்த மருமகனுக்கே மனைவியை மாமனார் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.