இரவு நேரத்தில் உங்கள் தொண்டை வறண்டு விடுகிறதா? இதற்கான காரணங்களும் தீர்வுகளும்!!

Photo of author

By Divya

இரவு நேரத்தில் உங்கள் தொண்டை வறண்டு விடுகிறதா? இதற்கான காரணங்களும் தீர்வுகளும்!!

நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் பொழுது எழுந்திருப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கும்.நிம்மதியான தூக்கத்தை கலைக்கும் செயல்கள் நடந்தால் அவை விரும்பத்தக்க விஷயமாக இருக்கும்.

அதேபோல் இரவு தூக்கத்தின் போது தொண்டையில் வறட்சி ஏற்பட்டால் அவை மிகவும் சிரமத்தை கொடுக்கும்.அதிகப்படியான தொண்டை வறட்சி உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.தூக்க காலத்தில் எழுந்து தண்ணீர் அருந்துவதை பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள்.

இரவு நேரத்தில் மட்டும் அதிகப்படியான தொண்டை வறட்சி ஏற்பட வாய் வழியாக சுவாசிப்பது தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.தொண்டையில் ஈரப்பதம் இல்லை என்பதை உணர்த்துகிறது.

பகல் நேரங்களில் போதிய நீர் அருந்தாமல் இருப்பதால் அவை தொண்டை வறட்சியை ஏற்படுத்துகிறது.தொண்டை வறட்சியுடன் காலையில் எழுந்தால் அவை உடல் ஆரோக்கியத்தை கெடுக்க தொடங்கி விடும்.மூச்சு திணறல் பிரச்சனை இருந்தால் தொண்டை வறட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

தொண்டை வறட்சியை எவ்வாறு போக்குவது?

தினமும் அதிகளவு நீர் அருந்த வேண்டும்.இரவு தூங்கச் செல்வதற்கு முன் சிறிது தண்ணீர் அருந்துவதன் மூலம் தொண்டையில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும்.

ஒரு கிளாஸ் நீரில் சிட்டிகை அளவு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து குடித்தால் இரவு நேர தொண்டை வறட்சி நீங்கும்.

இரவு நேரத்தில் சிறுநீர் வெளியேறும் உணர்வு இல்லாதவர்கள் அதிகளவு நீர் அருந்துவதன் மூலம் தொண்டை வறட்சியாவதை தடுக்க முடியும்.இதை எல்லாம் செய்வதன் மூலம் தொண்டை வறட்சியை சரி செய்து நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க முடியும்.