10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சரியான தேதியில் வெளியாகும்!!அரசு தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு!!
திட்டமிட்டது போலவே 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சரியான தேதியில் வெளியாகும் என்று அரசு தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டு இருக்கின்றது.
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. அதே போல பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்தது.
அதே போல எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து 10, 12 வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 13ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 22ம் தேதியும் நிறைவடைந்தது.
மேலும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 13ம் தேதி நிறைவடைந்தது. அதே போல தனியாக தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 25ம் தேதியும் முடிந்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் அரசு தேர்வுத்துறை 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அறிவித்தது.
இதையடுத்து தற்பொழுது வரை மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில் தேர்வு முடிவுகள் அறிவித்த தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் தமிழக அரசுத் தேர்வுத் துறை தற்பொழுது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தெடர்பாக அரசுத் தேர்வுத் துறை உயர் அதிகாரி அவர்கள் “வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். ஏற்கனவே திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ம் தேதியும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதியும் வெளியாகும். மேலும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியாகும்” என்று அறிவித்துள்ளார்.