பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய், மூன்று கேஸ் சிலிண்டர்கள்!! தெலுங்கு தேசம் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கை!!

0
152
1500 rupees per month for women, three gas cylinders!! Election Manifesto Released by Telugu Desam Alliance!!
1500 rupees per month for women, three gas cylinders!! Election Manifesto Released by Telugu Desam Alliance!!
பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய், மூன்று கேஸ் சிலிண்டர்கள்!! தெலுங்கு தேசம் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கை!!
பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய், விலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய், இலவசமாக மூன்று கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து சட்டப் பேரவை தேர்தலையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆந்திர மாநிலத்தில் ஒரே கட்டமாக மே 13ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணி தேர்தல் அறிக்கை நேற்று(ஏப்ரல்30) மாலை அமராவதியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், பாஜக கட்சியின் ஆந்திர மாநிலப் பொறுப்பாளர் சித்தார்த் நாத் சிங் ஆகியோர் இணைந்து இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கைக்கு சூப்பர் 6 என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருக்கின்றது.
தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்…
* படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும்.
* 18 வயது முதல் 59 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும்.
* 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு 15000 ரூபாய் அவர்களின் தாயார் வங்கிக் கணக்குகளில் அளிக்கப்படும்.
* ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
* படித்த இளைஞர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 4 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். அது போல 5 ஆண்டுகளுக்கு  20 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
* பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
* விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு 20000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
சூப்பர் 6 தேர்தல் அறிக்கையை போலவே சூப்பர் 2.0 என்ற பெயரில் மற்றொரு தேர்தல் அறிக்கையை தெலுங்கு தேசம் கூட்டணி வெளியிட்டுள்ளது. அந்த தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் பின்வருமாறு…
* இலவசமாக வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தி தரப்படும்.
* மாநிலம் முழுவதும் திறன் மேம்பாட்டு கல்வி வழங்கப்படும்.
* அனைவருக்கும் இலவச பட்டாவுடன் வீடு கட்டி தரப்படும்.
* வீடு கட்டுபவர்களுக்கு மணல் இலவசமாக வழங்கப்படும்.
* மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும் பொழுது மீனவர்களுக்கு மாதம் 20000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். அதே போல சேதமடைந்த படகுகளை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படும்.
* 50 வயதை கடந்து இருக்கும் பி.சி வகுப்பை சேர்ந்த அனைவருக்கும் மாதம் 4000 ரூபாய் வழங்கப்படும்.
* சட்டப்பேரவையில் பி.சி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
* உயர்ஜாதியில் இருக்கும் ஏழைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
* காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* வெளிநாட்டுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
* ஜூனியர் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் மாதம் 15000 உதவித் தொகை வழங்கப்படும்.