கோலிவுட்ல தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது இளையராஜா – வைரமுத்து இடையான கருத்து மோதல் தான். முதலில் வைரமுத்து ஒரு கருத்தை தெரிவிக்க, வைரமுத்துவின் கருத்துக்கு கங்கை அமரன் எதிர் கருத்து தெரிவித்திருந்தார்.
இசையை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்று இவர்களுக்குள் நடக்கும் போரில் ரசிகர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அப்படியாக ரசிகர் ஒருவரின் சமூக வலைத்தள பதிவு ஒன்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில்,
“கவிதை என்றால் அது கவிஞருக்கு மட்டுமே சொந்தம்.
பாடல் என்றால் அதன் அடிப்படை இசைதான்.
இசை இல்லாமல் ஒரு பாடலைப் பாடவே முடியாது.
எந்தவொரு கவிஞரையும் இசை அமைப்பாளர்தான் அறிமுகப்படுத்துகிறார்.
எந்த ஒரு கவிஞரும் இசை அமைப்பாளரையும் அறிமுகப்படுத்தியதில்லை.
“இது ஒரு பொன்மாலைப் பொழுது” வைரமுத்துவின் கவிதை வரிகள் படிக்கும்போது அத்தனை அருமையாக இருக்கும் அதைப் படிப்பவர்களுக்கு.
ஆனால் அது திரைப்படப் பாடலாக வரும்போது, அந்தப் பாடல் வரிகள் தொடங்கும் முன்பாக இசைக்கப்படும் இசை பாடல் வரிகளை படித்தவர்கள் மட்டுமல்ல கேட்கும் அனைவரையும் மன மகிழ வைக்கும்.
பாடல் வரிகளை புரிந்து கொள்ளாத வெற்று மொழியினரையும் ஈர்க்க வைக்கும் அந்த இசையின் வடிவம்.
அந்த இசை இல்லையென்றால்.. அந்தப் பாடல் வரிகளுக்கு அத்தனை “அருமை” இருக்காது.
“பருவமே புதிய பாடல் பாடு” என்ற பாடல். தமிழ் மொழி தெரியாதவர்களைக் கூட கேட்க வைத்தது அதன் இசை. பாடல் வரிகள் புரிய வேண்டிய தேவையே இல்லாமல் போனது.
“why this கொல வெறி” என்ற பாடல். படிக்கும் போது உப்பு சாப்பில்லாத வரிகள்தான். ஆனால் அந்த இசையால் அந்தப் பாடல் லட்சக் கணக்கானவர்களை, உலகளவில் பாட வைத்தது.
இந்த ஒரு பாடலாசிரியர், இசை அமைப்பாளர், பாடகர் மூன்று பேருக்கு மட்டுமே ஒரு பாடம் சொந்தமல்ல உழைக்கும் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்பது மட்டுமல்ல இசையை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் சொந்தம்தான். வெறுமனே வசனமாகப் படித்தால் ஒருவர் கூட ரசிக்க மாட்டார்.
கவிஞர் வாலி ஒரு நேர்காணலில் இப்படிச் சொல்லி இருப்பார்.
“நான் இசை அமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதனைப் பார்பதற்கு முன்பு சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் இருந்தேன். அவரைப் பார்த்த பிறகு சாப்பிடுவதற்கே நேரமில்லாமல் இருந்தேன்”
என்று இந்த ரசிகர் குறிப்பிடு குறிப்பிடுவது போல், இசைக்கு மொழி கிடையாது. எந்நாட்டவர்க்கும் மொழி புரியாமலேயே, வரிகள் தெரியாமலேயே இசையை ரசிக்க முடியும். இப்படியாக பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.