வாகன ஓட்டிகளே உஷார்! இன்று முதல் அமலுக்கு வந்த விதி! மீறினால் அபராதம்!

0
1084
வாகன ஓட்டிகளே உஷார்! இன்று முதல் அமலுக்கு வந்த விதி! மீறினால் அபராதம்!
traffic police

வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

இந்த விதிகளை மீறி போலீஸ், பாதுகாப்புத்துறை என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும், ஊடகங்களில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஊடகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

முதற்கட்டமாக போலீஸ், பாதுகாப்புத்துறை என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் மட்டுமே இன்று ஆய்வு நடத்த உள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Attention motorists!! Change of direction of traffic on major roads!!
Attention motorists!! Change of direction of traffic on major roads!!

இதுகுறித்த காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், சென்னை நகரில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச செயலகம், டி.என்.இ.பி., — ஜி.சி.சி., காவல் துறை உட்பட துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை வாகன எண் தகட்டிலும் (நம்பர் பிளேட்), வேறு பகுதியிலும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை பலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

இதை கருத்தில் கொண்டு, வாகனங்களில் உள்ள ஸ்டிக்கர்கள் மற்றும் துறை சார்ந்த அடையாளங்களை சரி செய்து கொள்ள மே, 1ம் தேதி வரை சென்னை போக்குவரத்து காவல்துறை கால அவகாசம் வழங்குகிறது.

அதன் பிறகும், இவ்வித மீறலில் ஈடுபடுபவோர் மீது, மே 2ம் தேதி முதல் (இன்று முதல்) எம்.வி.,சட்டம், 1988 -ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று காவல்துறை வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஓட்டு வீட்டை AC இருப்பது போல் குளுமையாக மாற்றலாம்.. இதோ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!
Next articleதர்மபுரி | 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிர்பிழைத்த அதிசியம்!