டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். பின்னர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். தற்போதுவரை அவரின் காவல் நீட்டிக்கிட்டு வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று, எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, தனது கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது,
அப்போது, அமலாக்கத் துறையின் விசாரணை நிறைவடைய அதிக நாட்கள் ஆகும் பட்சத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் ஜாமின் அளிப்பது குறித்து நாங்கள் பரிசளிக்கலாம் என்று, உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தனர்.
மேலும் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகள் என்ன என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டு, கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை வருகின்ற ஏழாம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக வருகின்ற ஏழாம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை ஜாமின் கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.