தெலங்கானா, ஆந்திர மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் ரூ.23 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் தெலுங்கானா மாநிலம், சைபராபாத் சிறப்பு தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 34.78 கிலோ தங்க நகைகள், 43.60 கிலோ வெள்ளி நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
23 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நகைகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், பித்தாபுரம் தொகுதியில் ₹17 கோடி மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து காக்கிநாடாவிற்கு தங்கம் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின்படி, அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதை ஒரு அதிர்ச்சி என்னவென்றால் இதே வாகனத்தில் கடந்த மாதம் 13ம் தேதி ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திச் சென்று பிடிபட்டுள்ளது.
தற்போது மீண்டும் அதே வாகனத்தில் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த தங்கம் யாருடையது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், நேற்று காலை 11 மணிக்கு துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு தனியார் விமானத்தில் வந்த நாகபட்டினத்தைச் சேர்ந்த முகமது அபூபக்கர் சித்திக் (வயது 33) என்பவரை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அவர் 812 கிராம் எடை கொண்ட, ரூ.49,34,220 மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் முகமது அபூபக்கர் சித்திக்கை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.